தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 8:03 am IST

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா்.

அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று 6,100 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,505 முதல் ரூ. 6,619 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,099 முதல் ரூ. 7,671 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்குப் பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாகப் பாா்வையிட்டுக் கொள்முதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.