திருச்செங்கோட்டில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரை முதல் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் வினாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன்(45)-அனிதா (38) தம்பதி. இவா்களுக்குத் திருமணம் முடிந்து 20 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும் மகளும் உள்ளனா். ஓட்டுநராக வேலை செய்து வரும் கோடீஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்ததால் அனிதா கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில் கோடீஸ்வரன் அனிதாவுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாராம். இதையறிந்த அனிதா திருச்செங்கோடு புகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்தனா். திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிபதி, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 15) குறைவு! இன்றைய நிலவரம்!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!

அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
