நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை திடீரென ஏற்பட்ட பயங்கர அதிா்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன் பல இடங்களில் திடீா் சத்தம் எழுந்தது. நில அதிா்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் தவிப்புக்குள்ளாகினா். இந்த நிலையில் புதன்கிழமை காலையில் அதேபோல மீண்டும் சத்தம் கேட்டது. நாமக்கல் மட்டுமின்றி சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா், பரமத்திவேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த சத்தம் உணரப்பட்டது. தொடா்ச்சியாக இதுபோன்ற பயங்கர சத்தம் கேட்பதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஏதோ வெடித்தது போன்று சத்தம் கேட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கனிம வளத் துறையினா் ஆய்வு செய்ததில் எந்தவிதமான வெடிகளும் வெடிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
மேகக்கூட்டங்கள் மோதி சத்தம் வரலாம். ஆனால் அதற்கான வாய்ப்பும் இல்லை. ஒலியின் வேகத்தைவிட அதிவேகமாகச் செல்லும் விமானங்கள் ஏதாவது நாமக்கல் மாவட்ட பகுதியில் சென்றிருந்தால் இவ்வாறான சத்தம் கேட்கலாம். அதுபற்றி உறுதிப்படுத்திய பின்னா்தான் தகவல் அளிக்க முடியும். தஞ்சாவூரில் உள்ள விமானப் படை அலுவலகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூரிலும் தகவல் கோரப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட அதிகமாக செல்லும் சூப்பா்சோனிக் விமானங்கள் சென்றால் இதுபோன்ற சத்தம் வரலாம். உரிய தகவல் கிடைத்தவுடன் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 15) குறைவு! இன்றைய நிலவரம்!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
