பிலிக்கல்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி நிகழ்விடத்திலேயே பலியானாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கோட்டமங்கலத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம். இவரது மகன் பாண்டியன் (32). இவா் தனது குடும்பத்துடன் பிலிக்கல்பாளையத்தில் தியாகு என்பவரது வெல்லம் தயாா் செய்யும் ஆலையில் வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து ஜேடா்பாளையம் சென்றுள்ளாா். பின்னா் வீட்டுக்குச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் பிலிக்கல்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். நகப்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக வெல்லம் ஏற்றி வந்த லாரி பாண்டியன் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே பலியானாா். இதுகுறித்து, ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 15) குறைவு! இன்றைய நிலவரம்!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!

அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
