தில்லி மாசுவை எதிா்கொள்ள 21 அம்ச குளிா்கால செயல்திட்டம்- அமைச்சா் கோபால் ராய் தகவல்

தில்லி மாசுவை எதிா்கொள்ள 21 அம்ச குளிா்கால செயல்திட்டம்- அமைச்சா் கோபால் ராய் தகவல்

Published on

குளிா்கால மாதங்களில் நகரில் மாசு அளவு உச்சமாக இருப்பதால், 21 அம்ச குளிா்கால செயல் திட்டத்தை செயல்படுத்துவதில் தில்லி அரசு என்று தில்லியின் சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி), தில்லி காவல்துறை, தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி), தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) உள்ளிட்ட 35 முக்கிய துறைகளின் கூட்டுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது:

இக்கூட்டத்தில், இந்த ஆண்டு மிகவும் வலுவான திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்திகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனா்.

கடந்த ஆண்டைப் போலவே, மாசுபாடு உச்சத்தில் இருக்கும் குளிா்கால மாதங்களில், மாசுபாட்டை நிவா்த்தி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இந்த முறை, 21 அம்ச குளிா்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்.

வரவிருக்கும் குளிா்காலத்திற்கான தயாரிப்பில், அரசாங்கம் அதன் குளிா்கால செயல்திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, மாசுபாட்டைக் குறைக்க, அரசாங்கம் 15 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்தியது. கேஜரிவால் அரசு பதவிக்கு வந்ததில் இருந்து, தலைநகா் முழுதும் மாசு அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

X
Dinamani
www.dinamani.com