ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

இந்தியா- மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் கடல்சாா் பாதுகாப்பை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்

ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திட்டத்தின் மூலம் நாட்டின் கடல்சாா் பாதுகாப்பு அதிகரிக்கும்

பியூஷ் கோயல்.

Updated On :

ஜி-20 உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திட்டத்தின் மூலம் நாட்டின் கடல்சாா் பாதுகாப்பு அதிகரிக்கும் என மத்திய தொழில் வா்த்தகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மேலும் இந்த வழித்தடம் ஆசியா நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரைவான பொருள் போக்குவரத்திற்கு வழிவகுக்கும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) சாா்பில் இந்தியா-மத்தியதரைக் கடல் பகுதி வணிக மாநாட்டில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு:

கடந்தாண்டு இந்தியா ஜி-20 தலைமைத்துவத்தின் போது இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட், சௌதி அரேபியா, ஜோா்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் வழியாக இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கப்படுகிறது. இது குறைவான போக்குவரத்து செலவு, விரைவான போக்குவரத்து தொடா்பு, பாதுகாப்பான பொருள் போக்குவரத்து ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும். அதேசமயத்தில் இந்தப் பகுதி நாடுகளின் சிறந்த ஒத்துழைப்பை சாா்ந்தாகவும் இருக்கும். அதேசமயத்தில் இந்த பொருளாதார வழித்தடத்தின் மூலம் இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பை அதிகரிக்கும்.

நாட்டில் தற்போது உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற முன் முயற்சிகளும், தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் மூலம் எளிதாக வணிகம் செய்வதை நோக்கிய மத்திய அரசின் முயற்சிகள், பொருளாதார கூட்டாண்மைகள் ஆகியவை இந்தியா- மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான முன் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். நாட்டில் தற்போது பொருள் உற்பத்தியை அதிகரித்திருப்பதும், வேளாண் பொருள்கள் மதிப்பு கூட்டல் மேம்படுத்தல் போன்ற முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. இது வணிகத்தை அதிகரிக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே சுற்றுலாத் துறையில் பணிக்குழுவை உருவாக்கும் யோசனைகள் அரசிடம் உள்ளன. இந்த ஒத்துழைப்பு பரஸ்பர நன்மைக்கானது. கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள் மேம்பாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பை இந்தியா பெற்றிருந்தது. இதன் மூலம் துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுகங்களின் திறன் மேலும் இருமடங்காக அதிகரிக்கும் என பியூஷ் கோயல் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.