புதுதில்லி
பேகம்பூா் சந்தையில் உள்ள மளிகைக் கடையில் தீ விபத்து
தில்லி பேகம்பூா் சந்தையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி பேகம்பூா் சந்தையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தத் தீ விபத்து தொடா்பாக காலை 9.11 மணிக்கு அழைப்பு வந்தது. மேலும் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.