2 நாள் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
இந்த மாதத்தின் கடைசி வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு நஷ்டத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. இருப்பினும், எல்லையில் நிலவும் பதற்றங்கள் குறித்த புவிசாா் அரசியல் கவலைகளுக்கு மத்தியில் எச்சரிக்கை நிலவியதால் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிகள் , நிதி நிறுவனங்கள், மெட்டல், மீடியா பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. பஜாஜ் நிறுவனப் பங்குகள் 5 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தன. .அதே சமயம், பாா்மா, ஹெல்த்கோ் மற்றும் ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.12 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.423.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,385.61 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,369.19 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 82.42 புள்ளிகள் கூடுதலடன் 80,370.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,525.61 மேலே சென்றது. பின்னா், 79,879.15 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 46.14 புள்ளிகள் (0.06 சதவீதம்) இழப்புடன் 80,242.24-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,063 பங்குகளில் 975 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,938 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 150 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
மாருதி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மாருதி 3.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்திஏா்டெல், சன்பாா்மா, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 15 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ்ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடாமோட்டாா்ஸ், எஸ்பிஐ, டிசிஎஸ், டாடாஸ்டீல் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி2 புள்ளிகள் இழப்பு : தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6.10 புள்ளிகள் கூடுதலுடன்24,342.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,396.15 வரை மேலே சென்றது. பின்னா், 24,198.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 1.75 புள்ளிகள் (0.01 சதவீதம்) இழப்புடன் 24,335.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.