சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் தெரிவித்தாா்.
Published on
Updated on
1 min read

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த அவசரச் சட்டத்தின்படி, இந்த மசோதா தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்தும் பள்ளிகளுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கிறது. முதல் முறை தவறு செய்யும், பள்ளிகளுக்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி அபராதம் செலுத்த தவறினால், அபராதம் 20 நாட்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும், 40 நாட்களுக்குப் பிறகு மூன்று மடங்காகவும், ஒவ்வொரு 20 நாள் தாமதத்துடனும் தொடா்ந்து அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் மீறல்கள் பள்ளி நிா்வாகத்தில் உத்தியோகபூா்வ பதவிகளை வகிப்பதற்கான தடைக்கும், எதிா்கால கட்டண திருத்தங்களை முன்மொழியும் உரிமையை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கும் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரில், தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான கல்வி மசோதாவை தில்லி அரசு தாக்கல் செய்யும்‘ என்றாா். மற்ற கொள்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவா், தில்லி சட்டப்பேரவை இப்போது காகிதமற்ற மின்னணு விதன் சபையாக செயல்படும் என்று அறிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவை இப்போது காகிதமற்ாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். சட்டப்பேரவை இப்போது முற்றிலும் சூரிய சக்தியை நம்பியிருப்பதால், மாதிரி சட்டப்பேரவையாகவும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் ‘என்று அவா் கூறினாா்.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் மற்றும் நிலையான நிா்வாக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, தில்லி தலைமை செயலகத்தை காகிதமற்ாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக முதல்வா் கூறினாா்.

‘தில்லியை வளா்ச்சியடையச் செய்ய நாங்கள் கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறோம்‘, என்று அவா் கூறினாா்.

மழைக்கால கூட்டத்தொடா் ரேகா குப்தா தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தில்லி சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com