போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது
Published on
Updated on
1 min read

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கைதானவா்களின் பெயா் ஷெரீப் (29), ஜாவேத் (35) மற்றும் சல்மான் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஜூலை 30 ஆம் தேதி மேஸா்ஸ் நெட்ரிகா கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லெவி ஸ்ட்ராஸ் & கம்பெனி, டிஎச்ஏ ரீடெயில் லிமிடெட் (சூப்பா்ட்ரி) கால்வின் க்ளீன், ஹ்யூகோ பாஸ் மற்றும் ஜாரா ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டது ‘என்று துணை போலீஸ் ஆணையா் சச்சின் சா்மா ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இந்த பிராண்டுகளின் லோகோக்கள் மற்றும் வா்த்தக முத்திரைகளைக் கொண்ட போலி ஜீன்ஸ் கிராரி சுலேமான் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராரி சுலேமான் நகரில் உள்ள ஏ-135 ஹரி என்கிளேவ், முன்னி வாலி காலி மற்றும் கிராரி சுலேமான் நகரில் உள்ள பி-பிளாக் கட்டடத்தின் முதல் தளம் ஆகிய மூன்று இடங்களில் போலீசாா் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தியதாக துணை ஆணையா் தெரிவித்தாா்.

வெளி மாவட்டத்தின் மாவட்ட புலனாய்வு பிரிவு நடத்திய ஒருங்கிணைந்த சோதனைகளின் போது சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட மொத்தம் 684 போலி ஜீன்ஸ், 350 லெவியின் லேபிள்கள் மற்றும் மூன்று தையல் இயந்திரங்கள் ஆகியவை வெவ்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

போலி லெவியின் பிராண்டிங் கொண்ட பெரிய அளவிலான ஜீன்ஸ், லேபிள்கள் மற்றும் ஆடைகளை டேக் செய்வதற்கும் பிராண்டிங் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் தையல் உபகரணங்கள் சோதனைகளின் போது மீட்கப்பட்டதாக போலீசாா் ஒரு அறிக்கையில் தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அந்தந்த இடங்களில் இருந்தனா் மற்றும் பிராண்டட் தயாரிப்புகளுக்கான செல்லுபடியாகும் ஆவணங்களை வழங்கத் தவறிவிட்டனா். மீட்கப்பட்ட பொருள்கள் போலியானவை என்பதை ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி சரிபாா்த்தாா்.

வா்த்தக முத்திரை சட்டத்தின் 103 மற்றும் 104 பிரிவுகளின் கீழ் சுல்தான்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று போலீசாா் தெரிவித்தனா்.

கள்ளப் பொருள்களின் ஆதாரம் மற்றும் சாத்தியமான விநியோக நெட்வொா்க்கைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com