காங்கிரஸ் கட்சியின் ஃபெரோஸ்பூா் ஜிா்கா எம்.எல்.ஏ. மம்மன் கானுக்கு எதிராக அவதூறு உள்ளடக்கத்தை பதிவிட்டதாக நூஹ் நகரத்தில் ஆறு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக எம்.எல்.ஏவின் சகோதரா் முஸ்த்கீம் கானின் புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை நாகினா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் மூன்று போ் சாஹிா், ஜகாரியா மற்றும் அப்பாா் என அடையாளம் காணப்பட்டனா்.
எம்எல்ஏ மம்மன் கான் மேவாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்கள் தொடா்பான விஷயத்தை எழுப்பினாா். வெள்ளிக்கிழமை சிலா் சட்டவிரோத இறைச்சி கூடங்களுக்கு எதிராக நூஹ் தானிய சந்தையில் போராட்டம் நடத்தினா். மேலும்ஸ சமூக ஊடகங்களில் மம்மன் கானை விமா்சித்தனா்.
நாங்கள் ஆறு போ் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று நாகினா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பிரவீன் குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.