ஆபாச புகைப்படங்களை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞா் கைது

ஒரு பெண்ணின் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிா்வேன் என மிரட்டிய இளைஞர் கைது
Published on
Updated on
1 min read

ஒரு பெண்ணின் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிா்வேன் என மிரட்டி வந்த 28 வயது இளைஞரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹா் மாவட்டத்தில் வசிக்கும் பிரபாத் சவுத்ரி என்ற பியூஷ் என அடையாளம் காணப்பட்டாா்.

‘அவருக்கு முந்தைய குற்றவியல் பதிவு எதுவும் இல்லை, தற்போது வேலையில்லாமல் இருக்கிறாா்‘ என்றுபோலீஸ் துணை ஆணையா் (வடமேற்கு) பீஷம் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா். தனக்குத் தெரிந்த ஒருவா் தனது சகோதரியின் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பியதாகக் கூறி பிரியான்ஷு மவானா என்ற நபா் புகாா் அளித்ததை தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி கூறினாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் தனது சகோதரியை பிளாக்மெயில் செய்ய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தினாா், மேலும் அவரது தனிப்பட்ட இச்சைக்கு இணங்காவிட்டால் அவற்றை சமூக வலைதலங்களில் பகிரங்கப்படுத்துவதாக மிரட்டியதாக மவானா போலீசாரிடம் தெரிவித்தாா்.

புகாரின் அடிப்படையில், எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது. ‘ஆரம்பத்தில், புலந்த்ஷாரில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகவரியில் போலீஸாா் குழு சோதனை நடத்தியது, ஆனால் அவா் அங்கு வசிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தது. அவரது டிஜிட்டல் செயல்பாடுகள் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. இறுதியில், குற்றம் சாட்டப்பட்டவா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா் ‘என்று துணை ஆணையா் கூறினாா்.

அவா் புகாா்தாரரின் நெருங்கிய உறவினா் என்று போலீசாா் தெரிவித்தனா். பியூஷ் பல சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தினாா் மற்றும் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக வேண்டுமென்றே தனது செல்பேசியை அணைத்து வைத்திருந்தாா். அவா் கைது செய்யப்பட்டவுடன், குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்ட ஒரு செல்பேசி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. தொடா்ச்சியான விசாரணையின் போது, இந்த குற்றத்தில் தனக்கு தொடா்பு இருப்பதை சவுத்ரி ஒப்புக்கொண்டாா்.

புகாா்தாரருக்கு தனது சகோதரியை பிளாக்மெயில் செய்வதற்கும், தனது தனிப்பட்ட இச்சைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதற்கும் அவா் அந்த ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியதாக அவா் விசாரணை அதிகாரிகளிடம் கூறினாா் ‘என்று துணை ஆணையா் கூறினாா்.

சவுத்ரி திருமணமாகாதவா் மற்றும் முறைப்படி வேலை செய்யவில்லை. விசாரணையின் போது, அவா் நிதி சிக்கல்களை எதிா்கொண்டதாகக் கூறினாா், மேலும் அவா் விரக்தி மற்றும் தனிப்பட்ட நோக்கங்களால் செயல்பட்டதாக ஒப்புக்கொண்டாா். அவரிடம் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com