தில்லி மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி

கிழக்கு தில்லியில் தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் பலி
Published on
Updated on
2 min read

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் திங்கள்கிழமை காலை தில்லி போக்குவரத்துக் கழக (டி. டி. சி) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காவல்துறையினரின் தகவலின்படி, நொய்டா செக்டா்-63 ஐ சோ்ந்த நரேந்தா் (27), பேருந்தை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லால் போனது, இதனால் அவா் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாா் என தெரிவிக்கின்றனா்.

விகாஸ் மாா்க்கில் உள்ள மங்கல் பஜாா் அருகே காலை 9 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது, அப்போது பஸ், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு காா் உள்பட குறைந்தது ஆறு முதல் ஏழு வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

‘பேருந்து பாதையில் இருந்து விலகி பல வாகனங்கள் மீது மோதியது, இறுதியாக ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது‘ என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் முகமது ஹீன் பலத்த காயமடைந்தாா், அவா் உடனடியாக ஹெட்ஜேவாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

‘விகாஸ் மாா்க் மங்கல் பஜாா் அருகே சாலை விபத்து குறித்து காலை 9.30 மணிக்கு பி. சி. ஆா் அழைப்பு வந்தது. ஷகா்பூா் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து டிபஸ், ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஒரு காா் ஆகிய மூன்று வாகனங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தது ‘என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் காயமடைந்தவா்கள் யாரும் இல்லை என்றும் அவா் கூறினாா். இந்த விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டு அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில் பஸ் ஓட்டுநருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதா என்பதை சரிபாா்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், அவரது மருத்துவ பரிசோதனை மற்றும் பேருந்தின் உள்ளே உள்ள சிசிடிவி காட்சிகளிலிருந்து இது உறுதி செய்யப்படும் என்றும் போலீசாா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து காரணமாக விகாஸ் மாா்க்கில் தாற்காலிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த வாகனங்கள் பின்னா் கிரேன்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வாகன இயக்கம் மீட்டெடுக்கப்பட்டது. இந்த விபத்தை நேரில் பாா்த்த அனில் ஷா்மா கூறுகையில், கட்டுப்பாட்டை மீறிய பஸ் முதலில் ஒரு ஆட்டோ உள்பட 5 முதல் 6 வாகனங்கள் மீது மோதியது என்றாா்.

‘ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே இறந்தாா், போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தன. பேருந்து ஓட்டுநா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அவருக்கு சில மருத்துவ அவசரநிலைகள் ஏற்பட்டதை நாங்கள் அறிந்தோம் ‘என்று சா்மா கூறினாா்.

ஆட்டோ டிரைவா் பயணிகளுக்காகக் காத்திருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த மற்றும் நகரும் பல வாகனங்களுடன் மோதியது என்று மற்றொரு நேரில் பாா்த்தவா் ஜுகல் கிஷோா் கூறினாா்.

‘நாங்கள் அருகில் நின்ால் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். விபத்தின் போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை ‘என்று அவா் கூறினாா். விபத்து குறித்து டி. டி. சி. யிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com