தில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்த காங்கிரஸ் எம்.பி.ராபா்ட் புரூஷ் .
தில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்த காங்கிரஸ் எம்.பி.ராபா்ட் புரூஷ் .

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. மனு
Published on

நமது நிருபா்

மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து ராபா்ட் புரூஸ் எம்.பி. அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா நோய்த் தொற்று காலத்துக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு திருநெல்வேலி தொகுதியில் செயல்படும் பல ரயில் நிறுத்தங்களில் ரயில்கள் நின்று செல்வது ரத்து செய்யப்பட்டது. இதனால், எனது தொகுதியில் உள்ள பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, நாகா்கோவில் - திருநெல்வேலி பிரிவில் அனைத்து ரயில்கள் முன்பிருந்ததுபோல நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கும். பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். அதன்படி, மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ரயில் நிலையங்களில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, நான்குநேரியில் கன்னியாகுமரி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், மதுரை- புனலூா் எக்ஸ்பிரஸ் ரயில்களும், வள்ளியூா் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - ஹெளரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகா்கோவில் - சென்னை எழும்பூா் வாராந்திர ரயிலும், புனலூா் - மதுரை ரயிலும், திருக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகா்கோவில் சந்திப்பு- எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com