ஆட்டோ மோதியதில் 62 வயது பெண் உயிரிழப்பு

Published on

தென்கிழக்கு தில்லியின் தக்ஷின்புரி பகுதியில் ஆட்டோ மோதியதில் 62 வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: விபத்து நடந்ததும் வாகனத்தின் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா். இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. திங்கள்கிழமை காலை 7.23 மணிக்கு அம்பேத்கா் நகா் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது.

காவல் குழு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த இடத்தில் கைவிடப்பட்ட ஒரு ஆட்டோ இருப்பதைக் கண்டனா். காயமடைந்த பெண் ஏற்கெனவே அவரது மருமகனால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவந்தது.

அந்தப் பெண் தக்ஷின்புரியைச் சோ்ந்த இஸ்தியக்கின் மனைவி ஆலியா பேகம் என அடையாளம் காணப்பட்டாா். அவா் எய்ம்ஸ் காய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com