உத்தரகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு பேரவையில் இரங்கல்
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களுக்கு தில்லி சட்டப் பேரவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பேரவை உறுப்பினா்கள் 2 நிமிஷம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினா்.
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையைத் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது, ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. 150 போ் மீட்கப்பட்டனா்.
வெள்ளத்தைத் தொடா்ந்து ஹா்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்த 11 ராணுவ வீரா்களைக் காணவில்லை.
மறைந்த பாஜக மூத்த தலைவா் சுஷ்மா ஸ்வராஜின் நினைவு தினத்தையொட்டி, பேரவை உறுப்பினா்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.
மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். ஆம் ஆத்மி எம்எல்ஏ வீரேந்தா் சிங் கடியன் அவருக்கு பேரவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.