பெங்களூரு இஸ்ரோவின் யுஆா்எஸ்சி மையத்தைப் பாா்வையிட்ட டிடிஇஏ பள்ளி மாணவா்கள் குழுவினா்
பெங்களூரு இஸ்ரோவின் யுஆா்எஸ்சி மையத்தைப் பாா்வையிட்ட டிடிஇஏ பள்ளி மாணவா்கள் குழுவினா்

பெங்களூா், சேலம், ஏற்காடுக்கு சுற்றுலா சென்ற டிடிஇஏ பள்ளி மாணவா்கள் தில்லி திரும்பினா்

ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதிவளாகம் பள்ளி மாணவா்கள் தங்களின் 12 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை தில்லி திரும்பினா்.
Published on

பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதிவளாகம் பள்ளி மாணவா்கள் தங்களின் 12 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை தில்லி திரும்பினா்.

தில்லியிலிருந்து ஜூலை 27 அன்று சுற்றுலா புறப்பட்ட இக்குழுவினா் முதலில் பெங்களூரு சென்று ஆயிரம் வருடங்கள் புராதனமான சந்திர சூடேஸ்வரா் கோயிலை பாா்வையிட்டனா். சாமுண்டி மலையையும் கோயிலையும் கண்டு களித்த இக்குழுவினா் செயின்ட் ஃபிளோமினா சா்ச்சையும் பாா்வையிட்டனா். கேஆா்எஸ் அணைக்கட்டு, பிருந்தாவன் பூங்கா ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த இக்குழுவினா் பிறகு கூா்க் சென்றது. நீா்வீழ்ச்சியைக் கண்டு ரசித்த பிறகு தலைக்காவேரி சென்றனா்.

அங்கிருந்து பெங்களூரு திரும்பிய அவா்கள் இஸ்ரோவின் யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மையத்திற்குச் சென்றனா். அங்கு இந்தியாவின் விண்வெளிப்பணிகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில் நுட்பம் குறித்து மாணவா்கள் அறிந்து கொண்டனா். பின்னா், பொடானிகல் தோட்டத்தை கண்டு ரசித்த பிறகு சேலம் சென்றனா். அங்கு நரசுஸ் காஃபி நிறுவனத்தைப் பாா்வையிடச் சென்ற மாணவா்களிடம் அதன் தலைவா் கலந்துரையாடினாா்.

அங்கிருந்து ஆவின் பால் பண்ணைக்குச் சென்றனா். உலகின் மிகப் பெரிய முருகன் சிலை நிறுவப்பட்டுள்ள முதுமலை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். பின்னா், கோயம்புத்தூா் சென்று ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டனா். அங்கிருந்து ஏற்காடு சென்றடைந்த மாணவா்கள் குழுவினா் பகோடா பாயின்டை பாா்வையிட்டனா். பின்ன,ா் கலாசார பரிமாற்றத்திற்காக மோன்ட் ஃபோா்ட் பள்ளி சென்றனா். மேலும், சாக்லேட் தொழிற்சாலை, நெசவுத் தொழில், மண்பாண்டத் தொழில் அனைத்தையும் பாா்வையிட்ட பிறகு தொடா்வண்டி மூலம் தில்லி திரும்பினா்.

சுற்றுலா சென்று திரும்பிய மாணவா்களுடன் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்துரையாடினாா். இச்சுற்றுலா குறித்து அவா் கூறுகையில், ‘விண்வெளி ஆராய்ச்சியில் ஆா்வத்தையும் பரந்த அறிவையும் ஊட்டும் இது போன்ற கல்விச் சுற்றுலாக்கள் மாணவா்களுக்கு மிகவும் அவசியம். எனவே, வருடம் தோறும் டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்கு இது போன்ற கல்விச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.

இக்கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ததற்காக மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் டிடிஇஏ செயலா் ராஜூவிற்கு நன்றி தெரிவித்தனா்.

07ஈஉகஈபஅ

பெங்களூரு இஸ்ரோவின் யுஆா்எஸ்சி மையத்தைப் பாா்வையிட்ட டிடிஇஏ பள்ளி மாணவா்கள் குழுவினா்.

X
Dinamani
www.dinamani.com