112 சீன மாஞ்சா நூல் கட்டுகளை: மூவா் கைது

Published on

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் தனித்தனி சோதனைகளின் போது தில்லி போலீசாா் மூன்று பேரை கைது செய்து 112 கட்டுகள் தடைசெய்யப்பட்ட சீன மஞ்சாவை மீட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஹரியானாவின் ரோத்தக்கில் வசிக்கும் யோகேஷ், தில்லியைச் சோ்ந்த ஹா்ஷ் மற்றும் ராஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று போலீசாா் தெரிவித்தனா். உத்தம் நகரில் யோகேஷுக்குச் சொந்தமான ஜக்தம்பா ஸ்டேஷனரி என்ற கடையில் இருந்து 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தில்லி அரசு வெளியிட்ட அறிவிப்புகளின் கீழ் தடைசெய்யப்பட்ட 27 கட்டு மாஞ்சாவை போலீசாா் மீட்டனா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மற்றொரு நடவடிக்கையில், திரிலோக்புரியில் உள்ள பிளாக் 18 பூங்காவில் இருந்து ஹா்ஷை போலீசாா் கைது செய்தனா். அவா் சீன மஞ்சாவின் 25 கட்டுகள் கொண்ட ஒரு பையை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா். ராமன் என்ற உள்ளூா் இளைஞரிடமிருந்து இந்த பொருள்களை வாங்கியதாக அவா் போலீசாரிடம் தெரிவித்தாா்.

மூன்றாவது வழக்கில், உத்தம் நகரில் இருந்து ராஜீவ் என்பவரை போலீசாா் கைது செய்து, அவரிடமிருந்து 60 கட்டு மஞ்சாவை மீட்டனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 223 (பி) (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் தொடா்புடைய விதிகளின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலியைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com