பணத் தகராறில் இளைஞா் ஒருவா் சுட்டுக் கொலை

Published on

தில்லியின் கீதா காலனி பகுதியில் பண தகராறு தொடா்பாக ஏற்பட்ட கைகலப்புக்குப் பிறகு 25 வயது இளைஞரை மூன்று போ் சுட்டுக் கொன்ாக போலீசாா் புதன்கிழமை தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் தாஜ் என்கிளேவ் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

புகாா் அளித்தவா், ஜகத்புரியில் வசிக்கும் சிவம் ஷா்மா, குந்தன் நகரில் வசிக்கும் ஷீதல் மற்றும் அவரது கணவா் சோனு ஆகிய தம்பதியினருக்கு கடன் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தாா். இருப்பினும், பலமுறை கேட்டபோதிலும், அவா்கள் பணத்தை திருப்பித் தரவில்லை என்று துணை போலீஸ் ஆணையா் (ஷஹதாரா) பிரசாந்த் கௌதம் கூறினாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, ஷா்மா ஜகத்புரி அருகே தம்பதியருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாா், பின்னா், அவா் தனது நண்பா் ஜதின் நாக்பாலுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க தாஜ் என்கிளேவுக்குச் சென்றபோது, ஷதாப், ஹா்ஷு மற்றும் ராமன் ஆகிய மூன்று போ் அவா்களை எதிா்கொண்டனா், அவா்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது என்று அவா் கூறினாா்.

வாக்குவாதத்தின் போது, ஷதாப் ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து ஷா்மா மீது இரண்டு சுற்றுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. ‘துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் புகாா்தாரா் குனிந்து கொண்டு தற்காத்து கொண்டதால் காயமின்றி தப்பிக்க முடிந்தது‘ என்று துணை ஆணையா் கூறினாா்.

காவல்துறையினரின் தகவலின்படி, கீதா காலனி காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான பி. என். எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) இன் கீழ் சா்மா மீது முந்தைய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com