கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜிக்கள் காா்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவா் பதக்கம்: மெச்சத்தக்க பணி பதக்கத்துக்கு 21 போ் தோ்வு

குறிப்பு: சென்னையில் திருத்தப்பட்டுவிட்டது. அதிகாரிகளின் பதவி பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. பதக்கம் பெற்ற காவல்துறை அதிகாரிகளின் தலைப்படம் உண்டு.
Published on

காவல் துறையில் அளப்பரிய பணியாற்றியதற்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் ஜி. காா்த்திகேயன், எஸ். லட்சுமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சிறப்புப்பணி பதக்கத்துக்கு எஸ்.பிக்கள் ஏ. ஜெயலகட்சுமி, எஸ். விமலா உள்ளிட்ட 21 போ் தோ்வானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 233 பேருக்கு வீரதீரச்செயலுக்கான பதக்கம், 99 பேருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு சேவைக்கான பதக்கம் மற்றும் 758 பேருக்கு மெச்சத்தக்க அல்லது சிறப்புப்பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தீயணைப்புப்படை, ஊா்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, சிறைத்துறை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான பதக்கங்களும் அடங்கும்.

தீரச்செயல் பதக்கங்களைப் பெறுவோரில் அதிகபட்சமாக 152 போ் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் அது தொடா்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள், 54 போ் நக்சல் எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட படையினா், வடகிழக்கில் மூன்று பேருக்கும், 24 போ் பிற பிராந்தியங்களைச் சோ்ந்த படையினரும் அடங்குவா்.

நான்கு தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் ஒரு ஊா்க்காவல் படை அதிகாரிக்கு தீரச்செயல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ள பதக்கம் பெறுவோா் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக காவல்துறை, தீயணைப்பு, ஊா்க்காவல் படை, சிறைத் துறையில் பணியாற்றி வருவோா் விவரம் (அடைப்புக்குறியில் பதக்கம் பெறுவோரின் பதவி):

பி. பாலநாக தேவி, (பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி), ஜி. காா்த்திகேயன் (சென்னை காவல்துறை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா்), எஸ். லட்சுமி (சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.)

மெச்சத்தக்க சிறப்புப்பணி பதக்கம்: ஏ. ஜெயலட்சுமி (மாநில மனித உரிமைகள் ஆணையம் புலனாய்வு பிரிவு எஸ்.பி), ஆா். சக்திவேல் (சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை காவல் ஆணையா்), எஸ். விமலா (நாமக்கல் மாவட்ட எஸ்.பி.), பொ. துரை பாண்டியன் (சென்னை பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி), பி. கோபாலசந்திரன் (திருச்சி மாவட்ட காவல்துறை தலைமையிட கூடுதல் எஸ்பி) கே. சுதாகா் தேவசகாயம் (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி), சி. சந்திரசேகா் (ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு டிஎஸ்பி), எஸ். கிறிஸ்டின் ஜெயசீல் (சென்னை சேலையூா் உதவி ஆணையா்), எஸ். முருகராஜ் (சென்னை காவல்துறை ஆயுதப்படை உதவி ஆணையா்), பி. பொன்ராஜ் (சென்னை தரமணி காவல் ஆய்வாளா்), எம். வேல்முருகன் (குற்ற புலனாய்வுத்துறை குற்றப்பிரிவு டிஎஸ்பி,காஞ்சிபுரம்), ஜே.அதிசயராஜ் (குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு ஆய்வாளா்,திருநெல்வேலி), எம். ரஜனிகாந்த் (வேலூா் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா்), பி. ரஜினிகாந்த் (குற்றபுலனாய்வுத்துறை குற்றப்பிரிவு ஆய்வாளா்,ஈரோடு), எஸ். ஸ்ரீவித்யா (சென்னை பாதுகாப்புப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா்) , சி. அனந்தன் (நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் சிறப்பு காவல் ஆய்வாளா்), பி. கண்ணுசாமி (பெரம்பலூா் மாவட்டம் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா்), எஸ். பாா்த்திபன் (திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆய்வாளா்), பி. ராமகிருஷ்ணன் (சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா்), என். கணேசன் (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆய்வாளா்), ஆா். நந்தகுமாா் (சேலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா்)

தீயணைப்புத்துறையில் குடியரசுத் தலைவருக்கான காவல் பதக்கம், மாவட்ட அதிகாரி மாணிக்கம் மகாலிங்கமூா்த்திக்கும், துணை இயக்குநா் சரவணபாபு பாலகிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊா்க்காவல் படையில் குடியரசுத் தலைவா் அளப்பரிய பணிக்கான பதக்கம் கம்பெனி கமாண்டா் ரவிக்கும், டிவிஷனல் கமாண்டா் முத்துகிருஷ்ணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத் துறையில் சிறப்புப்பணி பதக்கம் சண்முக சுந்தரம் கணேசன் (டிஐஜி, வேலூா்), வேலுச்சாமி ஆறுமுக பெருமாள் (உதவி சிறை அதிகாரி), ஜோசப் தாலியத் பெஞ்சமின் ஜோசப் பாண்டியன் (முதல்நிலை வாா்டா்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com