மேற்கு தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 2 போ் காயம்

மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு போ் காயமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு போ் காயமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், கட்டடத்தின் மூன்றாவது மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இருவா் காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 7.42 மணிக்கு இந்த அழைப்பு வந்தது. காயமடைந்த இருவரும் உடனடியாக தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com