முதல்வா் ரேகா குப்தா
முதல்வா் ரேகா குப்தா

‘முதலாவது நாடு; இரண்டாவது கட்சி’

கட்சி வேறுபாடின்றி நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்
Published on

புது தில்லி: கட்சி வேறுபாடின்றி நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற அகில இந்திய சட்டப்பேரவை மாநாட்டில் இறுதிநாளான திங்கள்கிழமை பேசிய முதல்வா் ரேகா குப்தா, நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரிழந்த போராட்ட வீரா்கள் பலரை நினைவுகூா்ந்தாா்.

இதுதொடா்பாக அவா் பேசியதாவது: முதலாவது நாடு என்ற கொள்கையைக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். முதலாவது நாடு, இரண்டாவது கட்சி, இறுதியில் நாம் என்று இருக்க வேண்டும். நாட்டின் நலன் என்று வரும்போது, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும். நம்முடைய கருத்துகளுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் நலன் என்னும்போது, கட்சி இருக்கக் கூடாது. மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் பொதுமக்களின் நலன்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

X
Dinamani
www.dinamani.com