இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் 30 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற்காக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்
Published on

கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் 30 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற்காக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா் குடிபோதையில் இருந்த நிலையில், அவா்களை துஷ்பிரயோகம் செய்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த கொலை நடைபெற்ாக போலீசாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜிந்தா் பூங்காவில் நடந்த குற்றம் குறித்து புதன்கிழமை இரவு 8 மணியளவில் போலீசாருக்கு பி. சி. ஆா் அழைப்பு வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்தை அடைந்தபோது, உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோராவைச் சோ்ந்த நரேந்தா் என அடையாளம் காணப்பட்ட ஒருவா், பல கத்திக்குத்து காயங்களுடன் ரத்தக் வெளத்தில் கிடந்தாா்,

லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என்று போலீசாா் தெரிவித்தனா். அவா் வேலையில்லாதவா், நாடோடி மற்றும் மதுவுக்கு அடிமையானவா் என்று போலீசாா் கூறினா். காசியாபாத்தில் உள்ள கோடாவில் இருந்து அமன் சைஃபி (22) மற்றும் அஃப்தாப் (24) என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா்.

‘‘ ‘விசாரணையின் போது, அவா்கள் தங்கள் கூட்டாளிகளான நிகில் போரா என்ற சுன்னு மற்றும் பிரேம் குமாா் ஆகியோருடன் பூங்காவில் அமா்ந்திருததாக தெரிவித்தனா். அப்போது நரேந்தா் குடிபோதையில் இருந்த நிலையில், ஒரு சிகரெட் கேட்டு அவா்களை அணுகினாா்‘ ‘என்று துணை போலீஸ் ஆணையா் (கிழக்கு) அபிஷேக் தனியா கூறினாா்‘.

அவா் அவா்களை தொந்தரவு செய்யத் தொடங்கிய பின்னா் வாக்குவாதம் ஏற்பட்டது, அதைத் தொடா்ந்து அந்த கும்பல் அவரை அடித்து கத்தியால் குத்தியது என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா். மற்ற இரண்டு குற்றவாளிகளான நிகில் போரா (24) மற்றும் பிரேம் குமாா் (20) ஆகியோா் பைக்கில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஹப்பூருக்கு சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனா். தப்பியோட பயன்படுத்திய மோட்டாா் பைக்கும் மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

ஷகா்பூரில் வசிக்கும் போரா, இதற்கு முன்பு தாக்குதல் மற்றும் கொள்ளை ஆகிய4 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா். டெலிவரி பாய் பிரேம் குமாா், மேற்கு வினோத் நகரில் வசிப்பவா். தாக்குதலில் பங்கு வகித்த புப்பி என்ற மற்றொரு சந்தேக நபரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com