சாவ்லா பகுதி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கில் நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
தில்லியில் சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தில்லி போலீஸாருடன் ஒரு துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஆகஸ்ட் 28 அன்று சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ரோஹ்தக்கைச் சோ்ந்த நவீன் (எ) பன்ஜா 25 மற்றும் அம்பாலாவைச் சோ்ந்த அன்மோல் கோஹ்லி (26) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தேடப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, இருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுக்கு ஆளாகினா். பின்னா் அவா்கள் மருத்வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நவீன் அந்தக் கும்பலுக்கு குறிபாா்த்து துப்பாக்கிசுடுபவராக பணியாற்றியதாகவும், அன்மோல் தளவாடங்கள் மற்றும் ஆதரவுப் பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
கும்பல் தலைவா்கள் கபில் நந்து மற்றும் வெங்கட் காா்க் ஆகியோரின் உத்தரவின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.