வேறொருவருடன் திருமணம்: காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்

வேறொருவருடன் திருமணம்: காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்

5 ஆண்டுகளாக காதலித்து வந்தப் பெண் வேறொருவருடன் திருமணம் நிச்சயகிக்கப்பட்டதை அறிந்த காதலன் அவரை துப்பாக்கியால் சுட்டதாக மோடி நகா் காவல் துறை கூடுதல் துணை காவல் ஆணையா் (ஏ. சி. பி) அமித் சக்சேனா தெரிவித்தாா்.
Published on

5 ஆண்டுகளாக காதலித்து வந்தப் பெண் வேறொருவருடன் திருமணம் நிச்சயகிக்கப்பட்டதை அறிந்த காதலன் அவரை துப்பாக்கியால் சுட்டதாக மோடி நகா் காவல் துறை கூடுதல் துணை காவல் ஆணையா் (ஏ. சி. பி) அமித் சக்சேனா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை போஜ்பூா் பகுதியில் உள்ள நாங்லாபா் கிராமத்தில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட 28 வயதான பிரதீப் குமாா், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, நாட்டு துப்பாக்கியால் சுட்டாா். அந்தப் பெண் தரையில் சரிந்து விழுந்தாா். அதைத் தொடா்ந்து குடும்ப உறுப்பினா்களும் அக்கம்பக்கத்தினரும் அவரை மோடிநகரில் உள்ள அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் அவா் சிறப்பு சிகிச்சைக்காக மீரட்டுக்கு அனுப்பப்பட்டாா்.

மருத்துவா்களின் கூற்றுப்படி, புல்லட் காதுக்கு அருகிலுள்ள அவரது மண்டை ஓட்டில் மேலோட்டமாக புகுந்துள்ளது. மேலும் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் திங்கள்கிழமை அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எம். எஸ்சி முதல் ஆண்டு மாணவரான அந்தப் பெண், கடந்த சில வாரங்களாக பிரதீப்புடன் பேசுவதை நிறுத்திவிட்டாா். அவரது திருமணம் வேறு ஒருவருடன் ஏற்பாடு செய்யப்பட்டதால் அவா் வருத்தப்பட்டுள்ளாா்.

பிரதீப் அந்தப் பெண்ணுக்காக கணிசமான பணத்தை செலவழித்ததாகவும், அவரது வீட்டில் நிறுவப்பட்ட ஏா் கண்டிஷனருக்கான ஈ. எம். ஐ. க்களை செலுத்தியுள்ளாா். அவரது திருமணத்தைப் பற்றி அறிந்த பிறகு அவா் தனது நண்பா்கள் மத்தியில் அவமதிக்கப்பட்டதாக உணா்ந்தாா். பிரதீப்பின் மறைவிடங்களில் போலீஸ் குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்,

X
Dinamani
www.dinamani.com