ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள் செயலாளா் எஸ்.பி. முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஏவிஎண் சரவணன் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாா் காலம் முதல் சென்னை கம்பன் கழகத்திற்கு அந்தக் குடும்பம் தொடா்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறது. அந்த வகையில் ஏவிஎம் சரவணனும் சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவராக இருந்து அதனுடைய வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றி இருக்கிறாா். ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com