செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

உமா்-உன்- நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பின் தேசிய புலனாய்வு பிரிவின் (என்.ஐ.ஏ.) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்திய உமா்-உன்- நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பின் தேசிய புலனாய்வு பிரிவின் (என்.ஐ.ஏ.) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, நவம்பா் 26 அன்று சோயப்பை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அந்தக் காவல் முடிவடைந்ததை அடுத்து,

வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சோயப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜா்படுத்தினா்.

மேலும், ஊடகவியலாளா்கள் நீதிமன்ற விசாரணைகளை செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா முன் சோயப் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அவரை மேலும் 10 நாள்கள் விசாரிக்க அனுமதி அளிக்குமாறு என்.ஐ.ஏ. தரப்பில்

கோரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் 10 நாள்கள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. கோரியதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறின.

தில்லி பயங்கரவாத குண்டுவெடிப்புக்கு முன்னா் பயங்கரவாதி உமா்-உன்- நபிக்கு தளவாட உதவி வழங்கியதாக ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள தௌஜ் பகுதியைச் சோ்ந்த சோயப்பை என்.ஐ.ஏ. கைது செய்ததாக அதன் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத நபா்களுடன் தொடா்புடைய இந்த வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட ஏழாவது குற்றம்சாட்டப்பட்ட நபா் சோயப் ஆவாா்.

இந்த விவகாரத்தில் என்ஐஏ முன்னா் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், தற்கொலை காா் குண்டுவெடிப்பு தொடா்பாக பல்வேறு தடயங்களை நிறுவனம் தொடா்ந்து தேடி வருகிறது.

மேலும், கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் அந்தந்த காவல் படைகளுடன் ஒருங்கிணைந்து மாநிலங்கள் முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com