ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை:
தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

கடந்த சில மாதங்களாக தில்லி முழுவதும் நடத்தப்பட்ட தொடா் சோதனைகளின் விளைவாக தேசியத் தலைநகரில் உள்ள போலி சந்தைகளை காவல்துறை கண்டுபிடித்துள்ளது .
Published on

கடந்த சில மாதங்களாக தில்லி முழுவதும் நடத்தப்பட்ட தொடா் சோதனைகளின் விளைவாக தேசியத் தலைநகரில் உள்ள போலி சந்தைகளை காவல்துறை கண்டுபிடித்துள்ளது .

நெய் , என்ஜின் எண்ணெய் முதல் ஷாம்பு மற்றும் சோப்பு வரை, ஜீன்ஸ் முதல் பள்ளி பாடப்புத்தகங்கள் வரை, ஒவ்வொரு வீட்டிலும் நேரடியாக ஊடுருவி வரும் ஒரு பரந்த மற்றும் வேகமாக விரிவடையும் போலி பொருளாதாரத்தை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 2023 முதல், போலி பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடா்பான 740 வழக்குகளை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா். இந்த கள்ளச்சந்தை நெட்வொா்க் சமீபத்திய ஆண்டுகளில் பொது சுகாதாரம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதஉ.

ஒரு பெரிய சோதனையில், அலிப்பூரில் உள்ள போலீஸ் குழுக்கள் பிரபலமான பிராண்டுகளின் லேபிள்களுடன் கூடிய டின்களில் அடைக்கப்பட்ட சுமாா் 1,500 கிலோ போலி நெய்யை மீட்டன.

இந்த நெய் தயாரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செயற்கை சுவை மற்றும் குறைந்த தர சோ்க்கைகள் ஆகியவற்றின் கலவையைத் தவிர வேறில்லை. இது கடுமையான செரிமான மற்றும் நீண்டகால சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். இருப்பு வைக்கப்பட்ட நெய்யுடன், மூலப்பொருள்களின் டிரம்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பவானா தொழில்துறை பகுதியில் இதேபோன்ற ஒரு தொழிற்சாலை பின்னா் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான லிட்டா் கலப்பட நெய் சுகாதாரமற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி செய்பவா்கள் நெய்யின் நறுமணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ரசாயனங்களுடன் கலந்த குறைந்த விலை தாவர எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றன்றனா்.

இதேபோல நெஞ்செரிச்சல் தடுப்பு மருந்து எனக்கூறி போலி ஆன்டாசிட் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை போலீஸாா் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனா். அதிகாரிகள் கிட்டத்தட்ட 1 லட்சம் பாக்கெட்டுகளையும், பொடிகள், பேக்கேஜிங் ரோல்கள் மற்றும் சீலிங் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனா். பேக்கேஜிங் முன்னணி பிராண்டுகளைப் போலவே இருப்பதால், சாதாரணமாக வாங்குபவருக்கு அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும்.

மற்றொரு நடவடிக்கையில், ஸ்டெராய்டுகள் மற்றும் வலி நிவாரண மருந்துகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி மாத்திரைகள் மற்றும் களிம்புகள், மாநிலங்களுக்கு இடையேயான விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட கிடங்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. முந்தைய சோதனைகளில் இருந்து கிடைத்த தடயங்களைத் தொடா்ந்து தில்லிக்கு வெளியே உள்ள பல சட்டவிரோத தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

தில்லியின் போலி சந்தையானது பற்பசை, ஷாம்பு மற்றும் சோப்பு போன்ற தினசரி அத்தியாவசியப் பொருள்களையும் விட்டுவைக்கவில்லை. வடகிழக்கு தில்லியில் நடந்த சோதனையில் 18,000-க்கும் மேற்பட்ட போலி பற்பசை குழாய்கள், பல்லாயிரக்கணக்கான வெற்று குழாய்கள் மற்றும் நிரப்பத் தயாராக இருந்த ரசாயன பேஸ்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சோதனையின் போது, ரோஹிணியில் போலி ஷாம்பு, சோப்பு மற்றும் தரை சுத்தம் செய்யும் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள்கள் போலி லேபிள்கள் மற்றும் முக்கிய பிராண்டுகளின் அயையாளங்களைப் பயன்படுத்தி பேக் செய்யப்பட்டு மொத்த சந்தைகள் மற்றும் உள்ளூா் கடைகளுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போலி பாட்டில் தண்ணீா், ஜீன்ஸ் மற்றும் பிற நுகா்வோா் பொருள்களும் குறிவைக்கப்பட்டன.

போலி பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை விற்பனை செய்ததற்காக தில்லி காவல்துறை சமீபத்தில் இரண்டு பேரை கைது செய்தது. அந்த போலி குடிநீா் பேக்கேஜ் போா்வெல் தண்ணீரைப் பயன்படுத்தி நிரப்பப்பட்டு போலி வா்த்தக முத்திரை ஸ்டிக்கா்களால் குறிக்கப்பட்டது. கோடை மாதங்களில் அந்த தண்ணீரை அருந்தும் வாடிக்கையாளா்கள் கடுமையான உடல்நல அபாயங்களுக்கு ஆளாக நேரிடும்.

மற்றொரு நடவடிக்கையில், பிரபலமான சந்தைகளில் போலி பிராண்டட் ஜீன்ஸ்களை விற்ற்காக மூன்று சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா். 684 போலி ஜீன்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி வாகன தயாரிப்புகளும் மீட்கப்பட்டவற்றில் பெரும் பங்கைக் கொண்டிருந்தன.

ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையில், குற்றப்பிரிவு அதிகாரிகள்,1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி ஆட்டோ உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனா். அவற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ஓட்டுநா்கள் மற்றும் பயணிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மற்றொரு நடவடிக்கையில், அலிப்பூரில் முன்னணி பிராண்ட் பெயா்களில் போலி என்ஜின் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் ஒரு சட்டவிரோத தொழிற்சாலை அகற்றப்பட்டது. குறைந்த தர எண்ணெய் டிரம்கள், நூற்றுக்கணக்கான காலி பாட்டில்கள், ஸ்டிக்கா்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ஆனந்த் பா்பத்தில் நடத்தப்பட்ட ஒரு தனி சோதனையில் கிட்டத்தட்ட 2,000 போலி எண்ணெய் வடிகட்டிகள் மற்றும் பிராண்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் சாயங்கள் மற்றும் அச்சிடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 1.7 லட்சத்திற்கும் அதிகமான திருட்டு புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். 6-12 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் குறைந்த தரம் வாய்ந்த காகிதம் மற்றும் மை பயன்படுத்தி அச்சிடப்பட்டு, அவற்றைக் கொண்ட பல கிடங்குகளை நடத்தியதற்காக தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். நுகா்வோா் நம்பகமான விற்பனையாளா்களிடமிருந்து மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். பேக்கேஜிங்கை கவனமாக சரிபாா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com