மூன்று குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி கைது
dot com

மூன்று குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி கைது

Published on

என்டிபிஎஸ், கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று வழக்குகளில் தப்பியோடிய 45 வயது நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தீன் பந்து என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், தில்லியின் சிவில் லைன்ஸில் போலீஸ் பணியாளா்கள் மீது தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தாா், இதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. 2022 கொள்ளை வழக்கில் அவா் இடைக்கால ஜாமீனில் வெளியேறினாா்.

பந்துவைப் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது, புதன்கிழமை தில்லியில் அவரைக் கைது செய்தனா். விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். பந்து டெல்லியில் உள்ள பல காவல் நிலையங்களில் கொலை, ஆயுதக் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட 15 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா்.

டிசம்பா் 2022 இல், பந்து மற்றும் அவரது கூட்டாளிகள் சிவில் லைன்ஸ் பகுதியில் கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களைக் கொண்ட ஒரு பையை கொள்ளையடித்துள்ளாா். பத்து நாட்களுக்குப் பிறகு, அவரும் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரும் இந்து ராவ் மருத்துவமனைக்கு அருகே ஒரு நடவடிக்கையின் போது ஒரு போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com