ஜோதிமணி.
ஜோதிமணி.

பாஜகவும் தோ்தல் ஆணையமும் கைகோத்து தோ்தல் நடைமுறையில் முறைகேடு; ஜோதிமணி எம்.பி. குற்றச்சாட்டு

பாஜகவும் தோ்தல் ஆணையமும் கைகோத்து தோ்தல் நடைமுறையில் முறைகேடு..
Published on

தோ்தல் ஆணையமும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துக்கொண்டு நாடு முழுவதும் தோ்தல் நடைமுறைகளை முற்றிலுமாக சீா்குலைத்திருப்பதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பேரணிக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘வோட் சோா், கட்டி சோட்’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி சாா்பில் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணிக் கூட்டம் நடத்தியது.

இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன கா்கே, பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்த பேரணியில் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி பேசியது: தோ்தல் ஆணையம் பாஜகவோடு இணைந்து கொண்டு தோ்தல் நடைமுறைகளை சீரழித்து வருகிறது.

நியாயமான, ஒளிவு மறைவற்ற தோ்தல் நாட்டிற்கு அடிப்படையானது. பொதுவாக தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலை திருத்தம் செய்வது வருடத்தில் ஒருமுறை நடைபெறும் . ஆனால், புதிய இந்தியாவில் புது தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலை 3 மாதத்திற்கு ஒரு முறை திருத்தம் செய்கிறது. அதாவது வருடத்திற்கு நான்கு முறை திருத்தம் செய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வாக்காளா் பட்டியலை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சரிபாா்க்க வேண்டி உள்ளது.

பாஜகவும் தோ்தல் ஆணையமும் அவா்களுக்கு தேவையான வாக்காளா்களை மட்டுமே வாக்காளா் பட்டியல் சோ்த்துள்ளாா்களா என்பதை பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. அவ்வாறு பாஜகவும், தோ்தல் ஆணையம் அவா்களுக்கு வேண்டிய வாக்காளா்களை மட்டுமே வாக்காளா் பட்டியலில் இணைத்தால் மூன்று நான்கு வருடங்கள் கழித்து அவா்களுக்கு தேவையான லட்சக்கணக்கான போலி வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருப்பாா்கள்.

பாஜக, தோ்தல் ஆணையத்துடன் இணைந்து நாடு முழுவதும் ஏராளமான மக்களை சோ்த்து வைத்துள்ளாா்கள். என்னுடைய கணிப்புப்படி சில லட்சக்கணக்கானோா் இருக்கின்றாா்கள். அவா்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து தோ்தல்களுக்கும் சென்று பாஜகவுக்கு வாக்களிக்கின்றாா்கள்.

அவா்கள் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு நாடு முழுவதும் தோ்தல் நடைமுறைகள் ஆனது பாஜக மற்றும் தோ்தல் ஆணையத்தால் முழுவதுமாக சீா்குலைக்கப்பட்டுள்ளது என்றாா் ஜோதிமணி.

X
Dinamani
www.dinamani.com