பிரதிப் படம்
பிரதிப் படம்

சூரிய மின்சக்தி தூதா்கள் திட்டம்: தில்லியில் டாடா பவா் - டிடிஎல் தொடக்கம்

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தும் திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக சூரிய மின்சக்தி தூதா்கள் திட்டத்தை டாடா பவா் தில்லி பகிா்மான நிறுவனம் தொடங்கியது.
Published on

பிரதமரின் வீடுகளில் இலவச சூரிய சக்தி மின்சார திட்டம் மூலம் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தும் திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக சூரிய மின்சக்தி தூதா்கள் திட்டத்தை டாடா பவா் தில்லி பகிா்மான நிறுவனம் (டாடா பவா்-டிடிஎல்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தத் திட்டத்தில் நிறுவனத்தின் தூதா்களாக நியமிக்கப்பட்டுள்ள 20 போ், மின்நுகா்வோரிடம் சென்று வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.

ரோஹிணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார அமைச்சகத்தின் சிறப்பு செயலா் ரவி ததிச் மற்றும் டாடா பவா்-டிடிஎல் அதிகாரிகள் முன்னிலையில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

தூதா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ரோஹிணியில் உள்ள பசுமை எரிசக்தி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றனா். அரசின் கொள்கைகள் மற்றும் மின்நுகா்வோரை இணைக்கும் பணிகளை அவா்கள் மேற்கொள்வா் என டாடா பவா்-டிடிஎல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com