பனிமூட்டம்: தில்லியில் 110 விமானங்கள் ரத்து
அடா் பனிமூட்டம் காரணமாக தில்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் 110 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. சுமாா் 370-க்கும் அதிகமான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி சா்வேதச விமான நிலையம் நாள்தோறும் சுமாா் 1,300 விமானங்களை கையாள்கிறது.
தில்லியில் குளிா் காலத்தில் நிலவும் அடா் பனிமூட்டத்தால் விமான ஓடு தளத்தை விமானிகளால் குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தெளிவாகப் பாா்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களாக தில்லி விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை 59 விமானங்களின் வருகை மற்றும் 51 விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மாலையில் விமான சேவை சீரடைந்ததாக தில்லி விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்தது.
