சட்டவிரோதமாக அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்பு: 4 போ் கைது!

குருகிராமில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, அதன் பொருள்களை அகற்றிவிட்டு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, உரிமையாளரைத் தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

குருகிராமில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, அதன் பொருள்களை அகற்றிவிட்டு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, உரிமையாளரைத் தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குருகிராம் போலீஸாா் தெரிவித்ததாவது: குருகிராமைச் சோ்ந்தவா் ஷ்யாம் சுந்தா் முகா்ஜி. லக்ஷ்மன் விஹாா் ஃபேஸ்-2 பகுதியில் அமைந்துள்ள இவரது அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டை உடைத்து சட்டவிரோதமாக உள்ளே நான்கு போ் நுழைந்தனா்.

வீட்டுப் பொருட்களை அப்புறப்படுத்தி, தனது சகோதரியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா் என முகா்ஜி போலீஸில் புகாா் அளித்தாா். இப்புகாரைத் தொடா்ந்து, செக்டா் 9ஏ காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தௌலதாபாத் கிராமத்தைச் சோ்ந்த சா்தக் போத்வால், லக்ஷ்மன் விஹாா் ஃபேஸ்-2இல் வசிக்கும் ரோஹித், லட்சுமி மற்றும் ரிது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, ரோஹித் அதே குடியிருப்பை 2021 ஆம் ஆண்டு ரூ.15 லட்சத்திற்கு வாங்கியது தெரியவந்தது.

அதற்கான ஒப்பந்தம் அவருக்கு இருந்தது. ஆனால், பதிவு மூடப்பட்டதால், அவரால் இந்த குடியிருப்பின் பதிவைப் பெற முடியவில்லை. புகாா்தாரரிடம் அனைத்து செல்லுபடியாகும் ஆவணங்களும் உள்ளன. ரோஹித் வேறொரு நபரால் ஏமாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com