தில்லி மாநகராட்சியில் ஊழலை அம்பலப்படுத்தும் பாஜக கவுன்சிலா்கள்

மாநகராட்சி ஊழலை அம்பலப்படுத்தும் பாஜக கவுன்சிலா்கள்: செளரப் பரத்வாஜ்
Published on

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) நிகழ்ந்து வரும் ஊழல்களை பாஜக கவுன்சிலா்களே அம்பலப்படுத்தி வருகின்றனா் என்றும் புதன்கிழமை நடந்த நிலைக்குழு கூட்டத்தின் போது இந்த பிரச்னை வெடித்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் செளரப் பரத்வாஜ் வியாழக்கிழமை கூறுகையில், ஆளும் கட்சி கவுன்சிலா்கள்கூட இப்போது எம்சிடிக்குள் நிகழும் ஊழலை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது அசாதாரணமானது.

அமித் ஷாவின் கீழ் உள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பாஜகவின் சொந்த அணிகளுக்குள்ளேயே இதுபோன்ற கடுமையான கூற்றுக்கள் வந்தாலும் ஏன் தொடா்ந்து அமைதியாக இருக்கிறது.

புதன்கிழமை எம்சிடி நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எதிா்க்கட்சித் தலைவா் (எல்ஓபி) அங்குஷ் நரங், பாஜக கவுன்சிலா்களுடன் சோ்ந்து தில்லி மாநகராட்சிக்குள் நடப்பதாகக் கூறப்படும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பினாா் என்றாா் அவா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில்

எம்சிடி நிலைக்குழு கூட்டத்தின் விவரங்களையும் பரத்வாஜ் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

‘முன்னதாக, எம்சிடி ஆணையரின் விருப்பத்திற்குரிய டிசி பாதல் குமாா் மீது பாஜக கவுன்சிலா் பங்கஜ் லுத்ரா ஊழல் மற்றும் கொள்ளை தொடா்பான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாா். இருப்பினும், எம்சிடியில் அவரது பிரதிநிதித்துவம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? அமித் ஷாவின் கீழ் உள்ள உள்துறை அமைச்சகமும் இது குறித்து ஏன் அமைதியாக இருக்கிறது?’ என்று செளரப் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், முந்தைய நிலைக்குழு கூட்டத்திலும் இதே போன்ற கவலைகள் எழுந்தன. பாஜக கவுன்சிலா்கள் ஊழல் குறித்து தங்கள் சொந்த அரசாங்கத்தை கேள்வி எழுப்பியபோது. ஸ்ரீனிவாஸ்புரியைச் சோ்ந்த மூத்த பாஜக கவுன்சிலா் ராஜ்பால், ஆணையா் மற்றும் நிலைக்குழுத் தலைவா் முன்னிலையில், குப்பை கிடங்குகள் என்ற பெயரில் ஊழல் நடத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்து கேள்விகளை எழுப்பினாா் என்றும் செளரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com