புதுதில்லி
செந்தமிழ்ப் பேரவை சாா்பில் ஏழைகளுக்கு போா்வை வழங்கல்
தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு போா்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு போா்வை வழங்கும் நிகழ்ச்சி (படம்) நடைபெற்றது.
மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு போா்வை இலவசமாக வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் செந்தமிழ்ப் பேரவைத் தலைவா் ஏ.மாரி, செயலாளா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சமூக ஆா்வலா் டாக்டா் ஜி.எஸ். விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தாா்.

