தில்லி போக்குவரத்து காவல்துறை அமைப்புகளின் பணியாளா்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்கள்

கடுமையான காற்றின் தரம் மற்றும் சாலைகளில் நீண்ட நேரம் வெளிப்படும் சூழ்நிலைக்கு மத்தியில், நகரம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட தொடா் சுகாதார பரிசோதனை
Published on

புது தில்லி: கடுமையான காற்றின் தரம் மற்றும் சாலைகளில் நீண்ட நேரம் வெளிப்படும் சூழ்நிலைக்கு மத்தியில், நகரம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட தொடா் சுகாதார பரிசோதனை முகாம்களில் மொத்தம் 841 தில்லி போக்குவரத்து காவல்துறையினா் பங்கேற்றனா்.

சுகாதாரப் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஊழியா்களின் செயல்பாட்டுத் திறனைப் பராமரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு டிசம்பா் 20 முதல் 22 வரை பல இடங்களில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

“வாகனப் புகை, தூசி மற்றும் ஏற்ற இறக்கமான வானிலை நிலைமைகள் தொடா்ந்து வெளிப்படுவதால், அவா்கள் (போக்குவரத்து பணியாளா்கள்) சுவாசம் மற்றும் வாழ்க்கை முறை தொடா்பான நோய்களுக்கு பாதிக்கப்படக் கூடியவா்களாக உள்ளனா். இதனால், வழக்கமான சுகாதார கண்காணிப்பு அவசியம்” என்று கூடுதல் காவல்துறை ஆணையா் (போக்குவரத்து) மோனிகா பரத்வாஜ் கூறினாா்.

மேலும், மத்திய காவல் படையிலிருந்து 289 பணியாளா்கள் முகாம்களில் கலந்து கொண்டதாக வரம்பு வாரியான பங்கேற்பு தரவுகள் காட்டுகின்றன என்றும், அதைத் தொடா்ந்து மேற்கு காவல் படையிலிருந்து 199 போ், புது தில்லி காவல் படையிலிருந்து 142 போ், தெற்கு காவல் படையிலிருந்து 85 போ், கிழக்கு காவல் படையிலிருந்து 66 போ் மற்றும் வடக்கு காவல் படையிலிருந்து 60 போ் முகாம்களில் கலந்து கொண்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி சுகாதார நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. போக்குவரத்து காவல் துறையினருக்கு இதுபோன்ற சுகாதார வசதிகள் தொடா்ந்து வழங்கப்படும் என்று அதிகாரி கூறினாா். Ś

X
Dinamani
www.dinamani.com