புது தில்லி: வடக்கு தில்லியில் உள்ள பவானா டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து தொடா்பாக காலை 7.51 மணிக்கு அழைப்பு வந்தது. 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனா். அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமலும் தடுத்தனா் என்று அதிகாரி தெரிவித்தாா்.