கோப்புப் படம்
கோப்புப் படம்

போலீஸாா் மீதான தாக்குதல் விவகாரம்: பிப்.24 வரை அமானத்துல்லா கானை கைது செய்ய தில்லி நீதிமன்றம் தடை

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானுக்கு பிப்.24-ஆம் தேதி வரை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கடந்த பிப்.10 ஆம் தேதி தேசியத் தலைநகரில் உள்ள ஜாமியா நகரில் போலீஸாரை தாக்கியதாகக் கூறப்படும் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானுக்கு பிப்.24-ஆம் தேதி வரை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் அமானத்துல்லா கான் விசாரணையில் இணைய வேண்டும் என்று சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அமானத்துல்லா கான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது வாதங்களை கேட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் தவிர அனைத்து ஆவணங்களையும் பிப்.24-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கவும் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. திங்கட்கிழமை ஜாமியா நகரில் ஒரு போலீஸ் குழு மீது தாக்குதல் நடத்தியதாக அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்தனா்.

கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி, காவலில் இருந்து தப்பிக்க அமானத்துல்லா கான் தலைமையிலான கும்பல் உதவியதாக போலீஸாா் தெரிவித்தனா். தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு குழுவினா், மற்றொரு வழக்கில் ஷாபாஸ் கானை கைது செய்ய முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com