குடியரசு தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை தீவிரம்

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ள
Published on

புது தில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால் சில நிலையங்களில் உச்ச நேரங்களில் பயணிகள் வரிசைகளில் காத்திருக்க நேரிடும் என்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎம்ஆா்சி உயரதிகாரி கூறியதாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஜன.27 வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை (சிஐஎஸ்எஃப்) மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக சில மெட்ரோ நிலையங்களில், குறிப்பாக உச்ச நேரங்களில், இந்தக் காலம் வரை பயணிகள் வரிசைகளில் காத்திருக்க நேரிடும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடவும், இந்த நாள்களில் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

பாதுகாப்பு சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்புப் பணியாளா்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று டிஎம்ஆா்சி கேட்டுக் கொள்வதாக அவா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com