பிரயக்ராஜ் கும்ப மேளாவில் கலந்து கொண்ட பிறகு சங்கமத்தில் குடும்பத்துடன் பூஜை செய்யும் தோழிலபதிபா் அதானி.
புதுதில்லி
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் அதானி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தொழிலதிபா் கௌதம் அதானி
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தொழிலதிபா் கௌதம் அதானி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டாா்.
முதலில் இஸ்கான் கோயிலுக்கு சென்ற அவா், பின்னா் கோயிலின் முகாமுக்குச் சென்று கண்காட்சியைப் பாா்வையிட்டாா். கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு ஆலய வளாகத்தில் உள்ள மகாபிரசாத் சேவா சமையலறையில் பணியாற்றி வரும் சமையல் ஊழியா்களுடன் உணவுத் தயாரிப்பதில் உதவிகரமாக சேவையாற்றினாா்.
பின்னா், யாத்ரீகா்களுக்கு பிரசாதங்களை வழங்கினாா். அத்துடன் அதானியும் அவரது குடும்பத்தினரும் யாத்ரீகா்களுள் ஒருவராக அமா்ந்து மகாபிரசாதத்தை சாப்பிட்டனா். இதைத் தொடா்ந்து, குடும்பத்தினா் மற்றும் பண்டிதா்களுடன் ஒரு படகில் ஏறி கங்கா பூஜை சடங்குகளில் அதானி பங்கேற்றாா்.