எய்மஸ் அருகிலுள்ள மின்மாற்றியில் தீ

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் காய சிகிச்சை மையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மின்மாற்றி வியாழக்கிழமை பிற்பகல் தீப்பிடித்தது
Published on

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) காய சிகிச்சை மையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மின்மாற்றி வியாழக்கிழமை பிற்பகல் தீப்பிடித்தது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா் மேலும் கூறினாா்.

‘எய்ம்ஸ் காய சிகிச்சை மையத்தில் பிற்பகல் 3.34 மணிக்கு தீ விபத்து குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் எட்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை‘ என்று தீயணைப்புத் துறை அதிகாரி கூறினாா். எய்ம்ஸ் நிறுவனத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com