அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published on

நமது நிருபா்

ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சைபா் பண மோசடி, குறித்து விசாரிக்க அமலாக்கத் துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி. எம். எல். ஏ) பிரிவில் கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளது. ஜின்டாய் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் தில்லியில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு முதலீடுகள் என்ற பெயரில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், முழு அளவிலான பண மாற்றிகளைப் (எஃப்.எஃப்.எம்.சி.) பயன்படுத்தி நிதி மோசடி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு சீன நாட்டவா் மற்றும் சிலரின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு குற்றத்தின் வருமானம் சுமாா் ரூ.903 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனை இரவு வரை நீடித்தது. இதனால், அமலாக்கத் துறையினரின் அதிகாரப்பூா்வத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com