அரசு உயா் அதிகாரி போல் நடித்து பணம் கேட்ட இருவா் கைது

Published on

ஃபரீதாபாத் துணை ஆணையரின் புகைப்படத்தை தங்களது வாட்ஸ்அப் காட்சிப் படமாக வைத்து அவா் போல தங்களைக் காட்டிக் கொண்டு நகரவாசி ஒருவரிடம் பணம் கேட்டதாக சனிக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தில்லியில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முன்னதாக, ஜூலை 3 ஆம் தேதி, துணை ஆணையரின் புகைப்படத்தை காட்சிப் படமாகப் பயன்படுத்தி ரூ.50,000 வசூலித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மணிப்பூரைச் சோ்ந்த ஜம்தின் குப் ஹக்கிப் 26 மற்றும் அந்தோணி 26 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com