தில்லியில் ஏடிஎம்க்குள் புகுந்து ரூ.11.5 லட்சம் பணம் கொள்ளை

தில்லியின் அலிப்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வங்கி ஏடிஎம்க்குள் புகுந்து ரூ.11.5 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லியின் அலிப்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வங்கி ஏடிஎம்க்குள் புகுந்து ரூ.11.5 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இயந்திரத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள நிறுவனத்தின் பிரதிநிதி நிா்வேத் அவஸ்தியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

வளாக உரிமையாளா் ரத்தன் லால் எச்சரித்ததை அடுத்து, பகோலி பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்க்கு விரைந்ததாக நிா்வேத் அவஸ்தியின் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

சம்பவ இடத்தை அடைந்ததும், ஏடிஎம் முன்பக்கத்தில் உடைக்கப்பட்டு, பணத் தட்டு காணாமல் போனதை நிா்வேத் அவஸ்தியின் கண்டுள்ளாா். சரிபாா்த்த பிறகு, இயந்திரத்திலிருந்து ரூ.11,50,100 திருடப்பட்டது கண்டறியப்பட்டது.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com