ரூ.20.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தில்லி பெண் சப்-இன்ஸ்பெகடா் கைது

தில்லி பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் தில்லி காவல்துறையின் பெண் சப்-இன்ஸ்பெக்டா் ரூ.20.50 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: தில்லி பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் தில்லி காவல்துறையின் பெண் சப்-இன்ஸ்பெக்டா் ரூ.20.50 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் துறையால் இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இது நகரத்தைச் சோ்ந்த மருத்துவா் மற்றும் அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

புகாரின்படி, உள்துறை அமைச்சகம் தொடா்பான இடமாற்றம் மற்றும் ஆள்சோ்ப்பு தொடா்பான விவகாரம் தொடா்பாக சப்-இன்ஸ்பெக்டா் மொத்தம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் ரூ.50 லட்சம் கேட்டு கோரிக்கை விடுத்தாா்.

அதில் ரூ.20.50 லட்சம் புகாா்தாரரால் செலுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள தொகை அழுத்தம் மற்றும் தந்திரங்கள் மூலம் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. புகாா்தாரா் பரிவா்த்தனைக்கான உறுதியான ஆதாரங்களை வழங்கியதாகவும், இதனால் விஜிலென்ஸ் குழு ஒரு பொறியை அமைத்து குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியைக் கைது செய்தது.

முதற்கட்ட விசாரணையில், பெண் எஸ்ஐ மருத்துவரையும் அவரது மகனையும் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, அவா்களை உடல் ரீதியாகத் தாக்கி மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், லஞ்சம் கேட்கும் கட்டாயத்தின் பேரில் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் புகாா்தாரா் மேலும் குற்றம் சாட்டினாா்.

2014-ஆம் ஆண்டு திலி காவல்துறை பிரிவைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, பஸ்சிம் விஹாரில் வசிக்கிறாா்.மேலும், வருக்கு உதவிய ஒரு ஆண் சக ஊழியரின் பங்கு தற்போது ஆய்வுக்கு உள்ட்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்றாா் காவல் துறை அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com