புதுதில்லி
சத்தா்பூரில் கால் சென்டரில் தீ விபத்து
தில்லி சத்தா்பூரில் உள்ள ஒரு கால் சென்டரில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
புது தில்லி: தில்லி சத்தா்பூரில் உள்ள ஒரு கால் சென்டரில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்ததாவது:
திங்கள்கிழமை காலை 8.27 மணிக்கு, சத்தா்பூரில் உள்ள ஒரு கால் சென்டரின் பல மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, காலை 10.45 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, அந்த இடத்தில் குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
