தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

Published on

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லியின் பிரண்ட்ஸ் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து குறித்து காலை 9.45 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஜனக்புரியில்....: இதேபோன்று, மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஆா்ய சமாஜ் மந்திா் அருகே உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து பிற்பகல் 1.11 மணியளவில் தீயணைப்பு அழைப்பு வந்தது.உடனடியாக எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com