’மாநிலங்களவைக்கு செல்ல விரும்பவில்லை‘

பஞ்சாபில் நடந்த லூதியானா மேற்கு இடைத்தோ்தலில் கட்சியின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றதை அடுத்து, தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தான் மாநிலங்களவைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறினாா்.
Published on

புது தில்லி: பஞ்சாபில் நடந்த லூதியானா மேற்கு இடைத்தோ்தலில் கட்சியின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றதை அடுத்து, தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தான் மாநிலங்களவைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறினாா்.

சஞ்ய் அரோரா இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அவா் மாநிலங்களவையில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டியிருக்கும்.

இந்நிலையில், திங்கள்கிழமை செய்தியாளா் சந்திப்பில், சஞ்சய் அரோராவின் இடத்தில் கட்சி யாரை பரிந்துரை செய்யும் என்று கேஜரிவாலிடம் கேட்கப்பட்டது.

‘நான் பல முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் மாநிலங்களவைக்குச் செல்லவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். யாரை பரிந்துரைப்பது என்பதை கட்சியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்யும்‘ என்று அவா் கூறினாா்.

சஞ்சய் அரோராவுக்குப் பதிலாக கட்சித் தலைவா் கேஜரிவால் மாநிலங்களவைக்கு நுழைவாா் என்று எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.

Open in App
Dinamani
www.dinamani.com