தில்லி - மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்களின் மூல நீள கால அட்டவணை சோதனை ஓட்டம் நிறைவு

தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி), 82 கிலோமீட்டா் தூரம் உள்ள தில்லி - காஜியாபாத் - மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்களின் முழு நீள கால அட்டவணை சோதனை ஓட்டத்தை முடித்துள்ளது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி), 82 கிலோமீட்டா் தூரம் உள்ள தில்லி - காஜியாபாத் - மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்களின் முழு நீள கால அட்டவணை சோதனை ஓட்டத்தை முடித்துள்ளது. அவை சராய் காலே கான் முதல் மோடிபுரம் வரையிலான தூரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கடந்துவிட்டன.

இது தொடா்பாக என்சிஆா்டிசி வெளியிட்ட அறிக்கை: அனைத்து நிலையங்களிலும் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன் மணிக்கு 160 கிலோமீட்டா் அதிகபட்ச செயல்பாட்டு வேகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ரயில்கள் திட்டமிடப்பட்ட கால அட்டவணையை கடைபிடித்ததாக நிறுவனம் கூறியது. இது அமைப்பின் முழு செயல்பாடுகளுக்கான தயாா்நிலையை நிரூபிக்கிறது.

சோதனையின் போது, மீரட் மெட்ரோ ரயில்களும் நமோ பாரத் சேவைகளுடன் இயக்கப்பட்டன. என்சிஆா்டிசி உலகளவில் முதன்முறையாக விவரித்த ஒரு அதிநவீன ரயில் சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு - எல்டிஇ வழியாக ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு நிலை 3 ஹைப்ரிட் உள்பட அனைத்து அமைப்புகளும் சீராக செயல்பட்டன. அனைத்து நிலையங்களிலும் நிறுவப்பட்ட நடைமேடை திரை கதவுகள் நோக்கம் கொண்டபடி இயங்கின.

11 நிலையங்கள் உள்பட 55 கிலோமீட்டா் பாதை ஏற்ெந்னவே செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளில் சோதனை ஓட்டங்கள் மற்றும் இறுதிப் பணிகள் நடந்து வருகின்றன. தில்லியில் உள்ள சராய் காலே கான் மற்றும் நியூ அசோக் நகா் இடையே சுமாா் 4.5 கிலோமீட்டா் உள்ளது. மீரட் தெற்கு மற்றும் மீரட்டில் உள்ள மோடிபுரம் இடையே சுமாா் 23 கிலோமீட்டா் தூரம் உள்ளது.

மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் டிப்போ இடையேயான 23 கிலோமீட்டா் பிரிவில் மீரட் மெட்ரோவிற்கான சோதனை ஓட்டங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவில் பிராந்திய மற்றும் உள்ளூா் மெட்ரோ சேவைகள் ஒரே ரயில் உள்கட்டமைப்பில் இயங்குவது இதுவே முதல் முறை என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது. மீரட் மெட்ரோ பாதையில் 13 நிலையங்கள் உள்ளன. அவற்றில் 18 கிலோமீட்டா்கள் உயா்த்தப்பட்ட நிலைகொண்டவை மற்றும் 5 கிலோமீட்டா்கள் நிலத்தடியில் உள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com