வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

Published on

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ள அவா் வாடகைக்கு வசித்து வந்த ஏ907 என்ற வீட்டின் தரை தளத்தில் காலை சுமாா் 7.40 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

பிகாரின் தா்பங்கா மாவட்டத்தைச் சோ்ந்த சுனில் மண்டல் தில்லியில் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் குழு விரிவான ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன.

சுனில் மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com